மருந்து, மாத்திரை இல்லாமல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?
நாட்டின் எல்லையில் அத்துமீறல் என ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் தகுந்த நடவடிக்கைகள் மூலம் தேசத்தைக் காப்பாற்றிவிடலாம்.

“சார், எனக்குச் சர்க் கரை வியாதி உள்ளது. மருந்து, மாத்திரை எல்லாம் வேண்டாம். எனக்கு இருக் கும் நீரிழிவு நோயை உணவு மூலமாகச் சரிசெய்ய முடியுமா?” என்கிற கேள்வியைப் பலரும் கேட்பதுண்டு. நாட்டின் எல்லையில் அத்துமீறல் என ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் தகுந்த நடவடிக்கைகள் மூலம் தேசத்தைக் காப்பாற்றிவிடலாம். அதேபோல ரத்தத்தில் சர்க்கரை அளவு எல்லையைத் தாண்டுவதை யும் தொடக்க நிலையிலே அறிந்து விட்டால் உடலைக் காப்பாற்றிவிடலாம். குறிப்பாக, இரண்டாம் வகை நீரிழிவு நோயால் (Type 2 Diabetes) பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டுரை இது.
நம்பிக்கையும் சிகிச்சைகளும்: இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது பரம்பரை காரணமாக ஏற்படுவதால் இன்சுலின் சிறப்பாகச் செயல்பட முடியாது; இன்சுலின் சுரப்பும் குறைவாக இருக்கும். ஒருகட்டத்தில் இன்சுலின் குறைந்து கொண்டே வந்து நாளடைவில் சுரக்காமலே போய்விடும்.
What's Your Reaction?