மம்மூட்டி - மோகன்லால் பட ஷூட்டிங் இலங்கையில் தொடக்கம்!

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Nov 19, 2024 - 21:50
 0  4
மம்மூட்டி - மோகன்லால் பட ஷூட்டிங் இலங்கையில் தொடக்கம்!

திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ம் வெளியான ‘Twenty:20’ மலையாள படத்தில் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக நடிக்க உள்ளனர். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow