மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத், நயன்தாரா... மகேஷ் நாராயணன் பட அப்டேட்

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் ஃபஹத் ஃபாசிலும், நயன்தாராவும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 20, 2024 - 18:15
 0  1
மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத், நயன்தாரா... மகேஷ் நாராயணன் பட அப்டேட்

திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் ஃபஹத் ஃபாசிலும், நயன்தாராவும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பின் நடிகர்கள் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘டேக் ஆஃப்’, ‘உயரே’, ‘மாலிக்’ படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளது. இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow