‘மனுஷி’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளா? - ஆக.24-ல் படத்தைப் பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

ஆண்ட்ரியா நடித்துள்ள  ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது.

Aug 20, 2025 - 07:35
 0  3
‘மனுஷி’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளா? - ஆக.24-ல் படத்தைப் பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இதில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றி மாறன் தரப்பி்ல், ‘மனுஷி’ படத்தில் எந்தவொரு ஆட்சேபகரமான காட்சிகளும் இடம்பெறவில்லை. விதிகளுக்கு புறம்பாக, தணிக்கை வாரியம் 37 காட்சிகளை நீக்கக்கோரியுள்ளது. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும், என வாதிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow