‘மண்டாடி’ குறித்த வதந்தி: சுஹாஸ் விளக்கம்
‘மண்டாடி’ படம் குறித்த வதந்திக்கு சுஹாஸ் விளக்கமளித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படம் ‘மண்டாடி’. ஆர்.எஸ். இன்ஃபோடையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன்.

‘மண்டாடி’ படம் குறித்த வதந்திக்கு சுஹாஸ் விளக்கமளித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படம் ‘மண்டாடி’. ஆர்.எஸ். இன்ஃபோடையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன். விரைவில் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. தமிழில் சூரி நாயகனாகவும், சுஹாஸ் வில்லனாகவும், அதே போல் தெலுங்கில் சுஹாஸ் நாயகனாகவும், சூரி வில்லனாகவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை பலரும் பகிர்ந்து படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
What's Your Reaction?