மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகத்தில் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

Jun 19, 2025 - 07:40
 0  4
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகத்தில் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ககன்யான் விண்கலத்தில் 4 விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி 400 கி.மீ உயரத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்யும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.

ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட்டில் பொருத்தக்கூடிய இன்ஜின்கள் சோதனையும் இஸ்ரோ மையங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ராக்கெட்டில் பொருத்தக்கூடிய கிரையோஜனிக் இன்ஜின், செமி கிரையோஜனிக் இன்ஜின், விகாஸ் இன்ஜின் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow