2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு: 5 ஆண்டுகளில் இரட்டிப்பானது
நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.

புதுடெல்லி: நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்மூலம் நாட்டின் நிதிநிலவரம் வலுவடைந்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?