மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.16 - 22

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.16- 22

Oct 15, 2025 - 17:30
 0  26
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.16 - 22

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளை செய்வீர்கள். பண தேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். வார மத்தியில் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow