மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

Jan 9, 2025 - 22:20
 0  3
மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

திருச்சூர்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow