போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 8, 2025 - 18:20
 0  9
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow