பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த தொழில்நுட்பம் வழங்கியது டிஆர்டிஓ

அதன் அடிப்​படை​யில் தற்​போது ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு 9 வித​மான தொழில்​நுட்​பங்​களை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் (டிஆர்​டிஓ) கடந்த சனிக்​கிழமை வழங்​கியது.

Jun 10, 2025 - 09:35
 0  4
பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த தொழில்நுட்பம் வழங்கியது டிஆர்டிஓ

புதுடெல்லி: பாது​காப்​புத் துறைக்கு தேவை​யான பாது​காப்பு கவச வாக​னங்​கள், ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில் தற்​போது ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு 9 வித​மான தொழில்​நுட்​பங்​களை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் (டிஆர்​டிஓ) கடந்த சனிக்​கிழமை வழங்​கியது.

தரை​யில் இருந்து இயக்​கப்​படும் பீரங்கி துப்​பாக்​கி​கள் மற்​றும் சிபிஆர்​என் (ரசாயனம், உயி​ரி, கதிர்​வீச்​சு, அணுசக்​தி) கண்​காணிப்பு வாக​னங்​கள், பாது​காப்பு கவச வாக​னங்​கள் உற்​பத்​திக்கு தேவை​யான தொழில்​நுட்​பங்​கள் பொதுத் துறை மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow