பொங்கல் ரேஸில் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'.

Oct 27, 2025 - 12:20
 0  3
பொங்கல் ரேஸில் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'. 'காதல் மட்டும் வேணா' படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.

"இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதைக் கலகலப்பாக சொல்லும் படம். படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது” என்கிறது படக்குழு. இதன் இரண்டாவது தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன. 9-ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow