பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா - 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் தொடக்கம் 

பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் நாளை (மார்ச். 20), பேரூர் ஆதின வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது.

Mar 19, 2025 - 18:35
 0  3
பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா - 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் தொடக்கம் 

கோவை: பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் நாளை (மார்ச் 20) பேரூர் ஆதின வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோவையில் இன்று (மார்ச் 19) செய்தியாளர்களிடம் கூறியது: “பேரூர் ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பேரூர் ஆதினம், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, நொய்யல் ஆறு அறக்கட்டளை ஆகியோர் சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow