‘பேராதரவுக்கு நன்றி; நமக்காக நாம் நிற்பது முக்கியம்’ - கவுரி கிஷன்!

உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தது பரபரப்புச் செய்தியான நிலையில், அந்தச் சம்பவம் குறித்து கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.

Nov 8, 2025 - 14:15
 0  1
‘பேராதரவுக்கு நன்றி; நமக்காக நாம் நிற்பது முக்கியம்’ - கவுரி கிஷன்!

சென்னை: உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தது பரபரப்புச் செய்தியான நிலையில், அந்தச் சம்பவம் குறித்து கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.

நடந்தது என்ன? - ‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. கவுரிக்கு ஆதரவாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், அவர் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow