பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Apr 8, 2025 - 14:10
 0  4
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் ''பண்ணாரி" எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, குண்டம், தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீர், பொங்கல் வைத்து வழிபாடும், நேற்று காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow