ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடக்கம்

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.

Apr 8, 2025 - 14:10
 0  3
ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடக்கம்

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு வாரத்துக்கு முன்பு வெற்றிமாறனை சந்தித்த போது 25 நிமிடங்கள் கதை சொன்னார். இதுவே போதும் என்று கூறினேன். அந்த 25 நிமிடங்கள் கதையிலேயே அப்படியொரு திரைக்கதை, நடிப்பு இருக்கிறது. உலகத் தமிழர்களுக்கு இப்படம் ஓர் அத்தியாயம், கலாச்சாரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow