‘பெட்டிக்குள்’ விழிப்புணர்வு: தொலைக்காட்சியின் முக்கியத்துவம் என்ன?

சுகாதாரத்தில் குறைபாடு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள், சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

Nov 21, 2024 - 18:15
 0  5
‘பெட்டிக்குள்’ விழிப்புணர்வு: தொலைக்காட்சியின் முக்கியத்துவம் என்ன?

சுகாதாரத்தில் குறைபாடு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள், சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன் சேவை தற்போதும் தொடர்கிறது. 2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே திணறியபோது கரோனாவின் தீவிரம், பாதிப்பு, சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் பற்றித் தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் ஏராளமானோர் பயன் பெற்றனர்.

இதுபோல, தொலைக்காட்சி அறிமுகமாகி சாமானியரின் வீடுகளுக்குள் குடிபுகுந்த காலம் முதல் சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசாலும் தனியாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் 1959-இல் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட தூர்தர்ஷன் தொலைக் காட்சியின் ஒளிபரப்புச் சேவை பின்னாளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் சுகாதாரம், கல்வி விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow