‘புஷ்பா 2’ கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு மூளை பாதிப்பு: காவல் ஆணையர் தகவல்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் திரையிடலின்போது, கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Dec 18, 2024 - 18:15
 0  3
‘புஷ்பா 2’ கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு மூளை பாதிப்பு: காவல் ஆணையர் தகவல்

தெலங்கானா: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் திரையிடலின்போது, கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் செல்லாததால், அவரது மூளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருப்பார்” என தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட திரையரங்கின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கூறி, திரையரங்குக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow