புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை

பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

Apr 18, 2025 - 08:45
 0  4
புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை

நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow