புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது.

Mar 15, 2025 - 11:30
 0  8
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.65,840 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை அதிகரித்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.8,230-க்கும், ஒரு பவுன் ரூ.65,840-க்கும் விற்பனையானது. பின்னர், மாலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow