‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ - ட்ரம்ப் ஆவேசம்

‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை வழங்கப்பட்டதன் நோக்கம் வேறு. அது அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Jan 31, 2025 - 10:10
 0  5
‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ - ட்ரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை வழங்கப்பட்டதன் நோக்கம் வேறு. அது அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமை சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்கு பொருந்தாது.” என்று ட்ரம்ப் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow