''பிரெஞ்சு ஓபன் பட்டம் கை நழுவியது வேதனை அளிக்கிறது'': சபலென்கா

நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார்.

Jun 8, 2025 - 16:45
 0  3
''பிரெஞ்சு ஓபன் பட்டம் கை நழுவியது வேதனை அளிக்கிறது'': சபலென்கா

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார். இந்த ஆட்டம் நேற்று பாரிஸில் நடைபெற்றது.

“இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான ஃபைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow