பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்!
கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அக்ரா(கானா): கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இன்று, அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
What's Your Reaction?