ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கினால் செர்னோபில் போல பேரழிவு: ரஷ்யா எச்சரிக்கை

ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

Jun 19, 2025 - 20:55
 0  4
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கினால் செர்னோபில் போல பேரழிவு: ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால், அதன் பின்னர் ஓர் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி இந்த அறிக்கையை தவறானது என்று மறுத்தார். ஆனாலும், புஷேர் தளம் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று இஸ்ரேல் தரப்பு கூறியது. இந்தப் பின்னணியில்தான், ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow