“பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்...” - காலக்கெடு விதித்து ஹமாஸுக்கு ட்ரம்ப் மிரட்டல்

 “வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Feb 11, 2025 - 16:15
 0  4
“பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்...” - காலக்கெடு விதித்து ஹமாஸுக்கு ட்ரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: “வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ் இயக்கத்தினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய ட்ரம்ப், “ஹமாஸ்கள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன். ஆனால் ஹமாஸ்கள் பிணைக் கைதிகளை இப்போது விடுவிப்போம், அப்போது விடுவிப்போம் எனக் கூறுகின்றனர். வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். சிறிது சிறிதாக அல்ல, பெரியளவில் தாக்குதல் நடத்தப்படும், மீண்டும் நரகத்தைச் சந்திக்க நேரிடும். எனினும், இது எனது தனிப்பட்ட கருத்து. இதனை இஸ்ரேல் நிராகரிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow