முடிவுக்கு வந்த ட்ரம்ப் - மஸ்க் நல்லுறவு: மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஒருவர் அமெரிக்காவின் அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் - செல்வமும் மோதும்போது அது வின் - வின் நிலையாகத்தான் செல்லும் என்றாலும், யாருக்கு, யார் அதிக அழுதத்தைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் - வின்’ (win - win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது.
பொங்கி வழிந்த ‘ப்ரோமேன்ஸ்’ - அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருடன் ஒட்டி உறவாடியவர் எலான் மஸ்க். அதன் பின்னரும் அந்த உறவு ‘இதெல்லாம் ஓவர்’ என்று செனட் உறுப்பினர்கள் சொல்லும் அளவுக்கு சென்று கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் என்றால், உலகின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்ட, ஒப்பந்தங்கள் கையெழுத்தான அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் மஸ்கின் குழந்தை விளையாடியது வரை அந்த ட்ரம்ப் - மஸ்க் ‘ப்ரோமேன்ஸ்’ (Bromance) பொங்கி வழிந்தது.
What's Your Reaction?