பிசிசிஐ புதிய தலைவர் செப்.28-ம் தேதி தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.

Sep 7, 2025 - 09:45
 0  2
பிசிசிஐ புதிய தலைவர் செப்.28-ம் தேதி தேர்வு

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ-யின் புதிய தலைவர் மற்றும் அடுத்த ஐபிஎல் சேர்மன் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பிசிசிஐ தலைவராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் பதவியில் இருந்து விலகினார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow