‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
’பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் சிலம்பரசன் நடிக்க உள்ளார்.

’பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் சிலம்பரசன் நடிக்க உள்ளார்.
நடிகர் சிலம்பரசன் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது புதிய பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிலம்பரசன் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
What's Your Reaction?