பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள்

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது.

May 8, 2025 - 01:00
 0  3
பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள்

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது வீடு​களை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் அடை​யு​மாறு முஸாப​ரா​பாத் பகு​தி​யில் உள்ள மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக உள்​ளூர்​வாசிகள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்​போது, “வெடி சத்​தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்​தோம். அப்​போது மீண்​டும் குண்டு வெடித்​தது. இதனால் அச்​சமடைந்த நாங்​கள், குழந்​தைகளு​டன் வீட்​டை​விட்​டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow