பழநி கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி - ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம்
பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழநி: பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு பொது (இலவச) தரிசனம் மட்டுமின்றி, ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இது தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்குகிறது.
What's Your Reaction?