பதிவுத் துறையில் அக்டோபர் வரை ரூ.1,222 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் தகவல்
பதிவுத்துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது அக்டோபர் மாதம் வரை, ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மேலும், சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்

சென்னை: பதிவுத் துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் வரை, ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மேலும், சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித் துணை ஆட்சியர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் பி.மூர்த்தி தலைமயைில் நடைபெற்றது.
What's Your Reaction?