இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் எம்.டி., சிஇஓ.வாக பிரியா நாயர் நியமனம்

லைப் பாய், பியர்​ஸ், டவ், லக்​ஸ், பாண்ட்​ஸ், குளோஸ் அப், பெப்​சோடென்ட், சர்ப் எக்​செல், ரின், விம், புரூ காபி, புரூக் பாண்ட் தேநீர், அழகு சாதனங்​கள் உட்பட பல்​வேறு நுகர்​வோர் பொருட்​களை இந்​துஸ்​தான் யுனிலீவர் நிறு​வனம் தயாரிக்​கிறது. 

Jul 12, 2025 - 07:50
 0  4
இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் எம்.டி., சிஇஓ.வாக பிரியா நாயர் நியமனம்

புதுடெல்லி: லைப் பாய், பியர்​ஸ், டவ், லக்​ஸ், பாண்ட்​ஸ், குளோஸ் அப், பெப்​சோடென்ட், சர்ப் எக்​செல், ரின், விம், புரூ காபி, புரூக் பாண்ட் தேநீர், அழகு சாதனங்​கள் உட்பட பல்​வேறு நுகர்​வோர் பொருட்​களை இந்​துஸ்​தான் யுனிலீவர் நிறு​வனம் தயாரிக்​கிறது.

இந்​நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் (எம்​.டி.) மற்​றும் தலைமை செயல் அதி​காரி​யாக (சிஇஓ) ரோஹித் ஜாவா பதவி வகிக்​கிறார். இவர் வரும் 31-ம் தேதி​யுடன் அப்​ப​த​வி​யில் இருந்து வில​கு​கிறார். இதையடுத்து பிரியா நாயரை அந்​தப் பதவி​களுக்கு இந்​துஸ்​தான் யுனிலீவர் நிறு​வனம் நியமித்​துள்​ளது. இதன் மூலம் இந்​நிறு​வனத்​தின் முதல் பெண் எம்​.டி, சிஇஓ என்ற பெரு​மையை பிரியா நாயர் பெறுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow