பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது

உடுமலை: உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்டு 38 ஊராட்சிகள் உள்ளன. அதில் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஊராட்சிகளில் தளி சாலையில் உள்ள போடிபட்டி ஊராட்சியும் ஒன்று. நகராட்சியை ஒட்டியே உள்ள ஊராட்சி என்பதால் தெருவிளக்கு, குடிநீர், மழை நீர் வடிகால், மரம் வளர்ப்பு என பல்வேறு அடிப்படை வசதிகளிலும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இந்த ஊராட்சியில் வீட்டு வரி விதிப்பு, குடிநீர் கட்டணம், இதர கட்டணங்கள் மற்றும் செலுத்தப்பட்ட விவரங்கள் உடனுக்குடன் பயனாளியின் செல்போனுக்கு குறுஞ் செய்தியாக கிடைக்கும் வகையில் வசதி செய்து தரபட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தன்னார்வலர்களின் உதவியால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
What's Your Reaction?