பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏப்.1-ல் நடைதிறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக நாளை மறுநாள்(ஏப்.1) நடை திறக்கப்பட உள்ளது.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக நாளை மறுநாள் (ஏப்.1) நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து உத்திர பூஜை, மாதாந்திர பூஜை நடைபெற உள்ளதால் 18 நாட்கள் கோயில் தொடர்ச்சியாக திறக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக வரும் 2-ம் தேதி கொடியேற்றப்பட உள்ளது. இதற்காக நாளை மறுநாள்(ஏப்1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள்(ஏப்.2) காலை 9.30மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இத்திருவிழா வரும் 11-ம் தேதி வரை நடைபெறும்.
What's Your Reaction?