பங்குச்சந்தை 5-வது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் 984, நிஃப்டி 324 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 984.23 புள்ளிகள் (1.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 77,690.95 ஆக இருந்தது. வர்த்தகத்தின்போது 1,141.88 புள்ளிகள் (1.45 சதவீதம்) வரை சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடையும்போது நிஃப்டி 324.40 புள்ளிகள் (1.36 சதவீதம்) சரிவடைந்து 23,559.05 ஆக இருந்தது.

Nov 13, 2024 - 18:25
 0  3
பங்குச்சந்தை 5-வது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் 984, நிஃப்டி 324 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 984.23 புள்ளிகள் (1.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 77,690.95 ஆக இருந்தது. வர்த்தகத்தின்போது 1,141.88 புள்ளிகள் (1.45 சதவீதம்) வரை சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடையும்போது நிஃப்டி 324.40 புள்ளிகள் (1.36 சதவீதம்) சரிவடைந்து 23,559.05 ஆக இருந்தது.

கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவில் அக்டோபர் மாத சில்லரை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்தது, வெளிநாட்டு நீதியின் வெளியேற்றம் போன்றவை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வழிவகுத்தது. இதனால் புதன்கிழமை பங்கு வர்த்தகம் 1 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவடைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow