பங்குச் சந்தைகள் 2 சதவீதம் வரை உயர்வு: சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் அதிகரிப்பு

2025-ம் ஆண்டின் தொடக்கம் பங்குச் சந்தைகளுக்கு உற்சாகமானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் வர்த்தக தினமான கடந்த புதன்கிழமையன்று சென்செக்ஸ் 368 புள்ளிகளும், நிஃப்டி 98 புள்ளிகளும் உயர்ந்தன.

Jan 3, 2025 - 04:20
 0  5
பங்குச் சந்தைகள் 2 சதவீதம் வரை உயர்வு: சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் அதிகரிப்பு

2025-ம் ஆண்டின் தொடக்கம் பங்குச் சந்தைகளுக்கு உற்சாகமானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் வர்த்தக தினமான கடந்த புதன்கிழமையன்று சென்செக்ஸ் 368 புள்ளிகளும், நிஃப்டி 98 புள்ளிகளும் உயர்ந்தன. இந்த நிலையில், உள்நாடு மற்றும் ஏற்றுமதி ரீபண்டுகள் கணிசமான அளவு அதிகரித்த போதிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.77 லட்சம் கோடியை எட்டியதாக வெளியான புள்ளிவிவரம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

அதன் காரணமாக, புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் (1.83 சதவீதம்) அதிகரித்து 79,943 புள்ளிகளில் நிலைத்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. வர்த்தத்தின் இடையே சென்செக்ஸ் 1,525 புள்ளிகள் வரை அதாவது 1.94 சதவீதம் வரை அதிகரித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow