நைஜீரியா சாலை விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

அபுஜா: நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
நைஜீரிய நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓகுன் மாகாணத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் நேற்று முன்தினம் இரவு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த பேருந்து சிரோமாவா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு தரையில் விழுந்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர்.
What's Your Reaction?