நேரடித் தாக்குதல்: வாகன இறக்குமதிக்கான ட்ரம்பின் 25% வரி குறித்து உலக நாடுகள் எதிர்வினை 

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

Mar 27, 2025 - 13:20
 0  3
நேரடித் தாக்குதல்: வாகன இறக்குமதிக்கான ட்ரம்பின் 25% வரி குறித்து உலக நாடுகள் எதிர்வினை 

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன. இது மிகவும் நேரடியான தாக்குதல் என்றும் சாடியுள்ளன.

அமெரிக்காவில் மீண்டும் உற்பத்தித்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை கொண்டுவரும் முயற்சியாக அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார். தனது புதிய வர்த்தக நடவடிக்கை நிரந்தரமானது, இது வரி வருவாயை அதிகரித்து, உற்பத்தித்துறை சார்ந்த வேலைகளை நாட்டில் அதிகப்படுத்தும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், "இந்தக் கூடுதல் கட்டணம், முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தும் மற்றும் வாகன இஞ்சின்கள், டிரான்ஸ்மிசன்கள், பவர்ட்ரெயின் பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உள்ளிட்ட முக்கியமான உதிரிபாகங்களுக்கும் பொருந்தும். இந்த பட்டியல் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்" என்று தெரிவித்திருந்தது. ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow