காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது.  இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்குவந்த நிலையில் நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது.

Mar 18, 2025 - 09:20
 0  6

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் தூதர், மற்றும்பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதையடுத்து காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிடம் முடல் ஹமாஸுக்கு எதிரான ராணுவ பலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow