நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு - போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன?

இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் ஷர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினா ஏற்கப்பட்டுவிட்டதாக அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார். 

Sep 9, 2025 - 17:35
 0  4
நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு - போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன?

காத்மாண்டு: இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்பதாக அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow