‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ 2வது சிங்கிள் எப்படி? - தனுஷ் குரலின் மேஜிக்!

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 2வது சிங்கிளான ‘காதல் ஃபெயில்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Nov 25, 2024 - 20:45
 0  3
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ 2வது சிங்கிள் எப்படி? - தனுஷ் குரலின் மேஜிக்!

சென்னை: தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 2வது சிங்கிளான ‘காதல் ஃபெயில்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2வது சிங்கிள் எப்படி? - ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். அவரின் ‘கரகர’ குரலின் வழியே ஒருவித சோகமான வைப்’பை உறுதி செய்கிறது இந்தப் பாடல். “தனியாளா தவிச்சாலும் இதுவே மேலு”, “புடிச்ச நிலவ இருட்டில் தொலைச்சேன்” போன்ற சில வரிகள் கவனிக்க வைத்தாலும், “எடுடா சரக்க, அவள மறக்க” போன்ற வரிகள் நெருடல். காதலை மறக்க மதுவை நாடச் சொல்லும் அபத்தமான வரிகள். பாடலில் இசை மட்டும் தனியே ஸ்கோர் செய்கிறது. சோகத்தை மேலும் பிழியும் தனுஷின் குரல் பாடலுடன் பக்காவாக பொருந்துகிறது. Gen Z தலைமுறைக்கான காதல் தோல்வி பாடல் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். ‘3’ படத்தில் கொலவெறி பாடலை தொடர்ந்து அதேபோன்றதொரு முயற்சி இந்தப் பாடலில் தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow