நியூயார்க் இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 10 பேர் காயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அமாசுரா என்ற இரவு கேளிக்கை விடுதிக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 11:20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கூடும் அந்த கேளிக்கை விடுதியில் இரவு நேர பார்டிகள் நடைபெறுவது வழக்கம்.
What's Your Reaction?