நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் ரூ.56 ஆயிரம் கோடி உதவி: நபார்டு வங்கி தகவல்
நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) 44-வது நிறுவன நாள் விழா சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து, நபார்டு வங்கியின் 2025-26-ம் நிதியாண்டுக்கான அலகு செலவு கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து ‘நேப்சுவடு’ எனப்படும் விவசாயப் பொருட்களை கண்டறியும் செயலியையும் அறிமுகம் செய்துவைத்தார்.
What's Your Reaction?