நடிகையாக அறிமுகமாகிறார் வனிதாவின் மகள் ஜோவிகா!
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு காந்த் தேவா இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.
இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் வசந்தபாலன், அம்பிகா, பாத்திமா பாபு, மதியழகன், ஷகிலா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?