த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு கொச்சியில் தொடக்கம்!
மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில் உட்பட பலர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’.

மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில் உட்பட பலர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வெற்றி பெற்றது.
இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ உருவாக இருப்பதாக இயக்குநர் ஜீத்து ஜோசப், மோகன்லால் ஆகியோர் கூறி வந்தனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு கொச்சி புறநகர் பகுதியில் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
What's Your Reaction?