தொடர் உச்சங்களுக்கு இடையே சற்றே ஆறுதல் அளித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தொடர்ந்து விலையுயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அச்சத்தில் ஆழ்த்திய தங்கம் விலை இன்று (பிப்.12) சற்றே ஆறுதல் தரும் வகையில் பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

Feb 12, 2025 - 11:40
 0  4
தொடர் உச்சங்களுக்கு இடையே சற்றே ஆறுதல் அளித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: தொடர்ந்து விலையுயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அச்சத்தில் ஆழ்த்திய தங்கம் விலை இன்று (பிப்.12) சற்றே ஆறுதல் தரும் வகையில் பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.7,940-க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow