தேசிய மேம்பாட்டுக்காக ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்: பாகிஸ்தான் நிதி அமைப்பு ஒப்புதல்

தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

Jun 6, 2025 - 01:35
 0  6
தேசிய மேம்பாட்டுக்காக ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்: பாகிஸ்தான் நிதி அமைப்பு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடையும் வகையில், ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு தேசிய பொருளாதா கவுன்சில் ஒருமனதாக தனது ஒப்புதலை தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow