தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 137 பதக்கம் குவித்து தமிழகம் சாம்பியன்

தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் ஆதரவோடு, எஸ்ஐவியுஎஸ் இந்தியா மற்றும் எஸ்ஐவியுஎஸ் தமிழ்நாடு ஆகிய இணைந்து 2024-ம் ஆண்டிற்கான எஸ்ஐவியுஎஸ் இந்தியா தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள நீச்சல் மையத்தில் நடத்தின.

Dec 6, 2024 - 04:15
 0  5
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 137 பதக்கம் குவித்து தமிழகம் சாம்பியன்

சென்னை: தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் ஆதரவோடு, எஸ்ஐவியுஎஸ் இந்தியா மற்றும் எஸ்ஐவியுஎஸ் தமிழ்நாடு ஆகிய இணைந்து 2024-ம் ஆண்டிற்கான எஸ்ஐவியுஎஸ் இந்தியா தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள நீச்சல் மையத்தில் நடத்தின. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில்

அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் உடையோர் பங்கேற்றனர். தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் வீரர்கள் கலந்து கொண்டனர். கடைசி நாளான நேற்று ஆடவர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.சஞ்ஜித் மணி பந்தய தூரத்தை 1:15.9 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அலி ராசா வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தைச் சேர்ந்த கே.லக் ஷய் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow