துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ரூ.100 கோடி வசூல்!

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 14, 2024 - 16:25
 0  3
துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ரூ.100 கோடி வசூல்!

சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow