துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.14 - 20

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.14 -20

Aug 13, 2025 - 17:35
 0  6
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.14 - 20

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எனினும் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow